விஜய் சேதுபதி படங்கள் என்றாலே இப்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இதில் அவர் தற்போது நடித்து வரும் 'கருப்பன்' படமும் விதிவிலக்கல்ல. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தான்யா நடித்து வருகிறார். 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இப்படத்தின் இயக்குநர். முதன்முறையாக ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கதைக்களம் உரு வாக்கப்பட்டுள்ளது. முழுக்க கிராமத் துப் பின்னணி கொண்ட கதை என்றா லும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காதாம். அண்மையில் வெளியான இப்படத்தின் 'முதல்தோற்ற சுவ ரொட்டி'க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலை யில் 'கருப்பன்' பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலு டன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இப்படத்துக்கு டி.இமான் இசை யமைத்துள்ளார். இசை உரிமையை பிரபல சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என அறிவித் துள்ளார் டி.இமான். மேலும் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். 'விக்ரம் வேதா' வெற்றியைத் தொடர்ந்து வெளியாக இருப்பதால் 'கருப்பன்' படம் குறித்து விநியோகஸ் தர்களும் பெரும் எதிர் பார்ப்புகளுடன் காத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி யுடன் மோதும் வில்லன் பாபி சிம்ஹா என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளித்துள்ளது. இருவருமே நடிப்பில் அசத்தக் கூடியவர்கள் என் பதால் திரையில் இவர்களது மோதல் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத் துக்கு ஷக்தி ஒளிப்பதிவு செய்து வரு கிறார். விரைவில் 'கருப்பன்' ரசிகர் களை சந்திக்க வருவார் என்று இப்படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி, தான்யா

