இறுதிக்கட்டப் படப்படிப்பில் இயக்குநர் சித்திக்கின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

இறுதிக்கட்டப் படப்படிப்பில் இயக்குநர் சித்திக்கின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'

1 mins read
0e239236-ae86-42d8-9779-ad9fa673629b
-

அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாள இயக்குநர் சித்திக் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் மலையாளப் பதிப்பில் மம்முட்டியும் நயன்தாராவும் நடித்திருந்தனர். படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழ்ப் பதிப்பில் குழந்தை நட்சத்திரங்கள் நைனிகா, ராகவன் இருவரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். தமிழ் பதிப்பு வெளியான கையோடு, இந்தியிலும் இப்படத்தை உருவாக்க சித்திக் திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக சஞ்சய் தத் நாயகனாக நடிப்பார் எனக் கேள்வி.