இனிகோ பிரபாகர், ஸ்ரீபிரியங்கா ஜோடி சேர்ந்துள்ள படம் 'பிச்சுவாக்கத்தி'. ஐயப்பன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைகாண உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது 'நான் கடவுள்' ராஜேந்திரன் தன் கண்களையே இழக்கும் அளவுக்கு ஓர் ஆபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாகத் தப்பி உள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றது. அப்போது படமாக்கப்பட்ட காட்சியின்படி, ராஜேந்திரன் தன் வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பாராம். இச்சமயம் யோகி பாபு தனது நண்பர்களுடன் அவரைக் கொலை செய்ய வருவாராம்.
அப்போது யோகி பாபு தரப்பினர் சில உடற்பயிற்சிக் கருவிகளை எடுத்து மொட்டை ராஜேந்திரனைத் தாக்கவேண்டும். இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, உடற்பயிற்சிக் கருவிகள் ராஜேந்திரனின் கண்களில் பலமாகக் குத்த, உடனே ரத்தம் வழிந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பதறிப்போக, ராஜேந்திரனும் வழிந்த ரத்தத்தைத் தொடைத்து விட்டு, தொடர்ந்து நடிப்பதாகக் கூறி இருக்கிறார். "உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு நடிக்கலாம் என்றேன். கண்களில் காயம்பட்ட பிறகு, சும்மா இருந்துவிட முடியுமா என்றும் எச்சரித்தேன். ஆனால் தன்னால் படப்பிடிப்பு தாமதப்படக் கூடாது என்ற உயர்ந்த எண் ணத்தில் ராஜேந்திரன் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். "அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்ல வேளையாக அவரது கண்களில் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. இதற்காகக் கடவுளுக்கும் நன்றி," என்று நெகிழ்கிறார் இயக்குநர் ஐயப்பன்.
'பிச்சுவாக்கத்தி' படத்தில் செங்குட்டுவன், அனிஷா

