'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் யார் பிரபலமானார்களோ இல்லையோ, ரசிகர்கள் மத்தியில் கமலை விட அதிகம் பெயர் எடுத்திருப்பது சந்தேகமே இல்லாமல் ஓவியாதான். 'பிக்பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்துள்ளார். தற்போது திரையுலகில் ஓவியாவின் மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று வரை அவரை திரும்பிக் கூடப் பார்க்காத தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இப்போது அவரை ஒப்பந்தம் செய்ய ஆளாய்ப் பறக் கிறார்கள். இத்தனைக்கும் மீண்டும் 'பிக்பாஸ்' வீட்டுக்குள் செல்ல வேண் டும் என ஓவியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம். அதற்காக பெரிய சம்பளமும் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால் அம்மணி அசைந்து கொடுக்கவில்லை. மனக்காயத்தில் இருந்து விடுபட சில காலம் ஆகும் என்று கூறியவர், சினிமாவில் நடிக்கவும் மறுத்து வருவதாகவே கூறப்பட்டது.
இந்நிலையில் சில புதுப்பட வாய்ப் புகளை ஓவியா ஏற்றுக்கொண்டிருப் பதாகக் கேள்வி. 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படங்களில் நடித்திருக்கும் ஓவியாவை இயக்குநர் ஆனந்த்ஷங்கர் தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடி வெடுத்துள்ளார். அடுத்து 'யாமிருக்க பயமேன்' படத்தின் இரண்டாம் பாகத் திலும் ஓவியா நடிக்கிறார். இதில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்க உள்ளார்.
இவை போக, பிரபல முன்னணி நாயகன் ஒருவரது படத்தில் ஓவி யாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கேள்வி. ஆனால் இதில் அவருக்கு கதாநாயகி வேடமல்ல. எனவே யோசித்து முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம். இதற்கிடையே ஓவியா நடித்துள்ள மலையாளப் படங்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓவியா நடிப்பில் ஆறு ஆண்டு களுக்கு முன்பு வெளியான 'மனுஷ்ய மிருகம்' என்ற மலையாளப் படம் தமிழில் 'போலிஸ் ராஜ்யம்' என்ற பெயரில் வர இருக்கிறது. இதில் பிருத்விராஜ், கிரண், ஓவியா உட்பட பலர் நடித்திருக்கி றார்கள். பாபுராஜ் இயக்கி இருக்கிறார். தமிழ் வசனம், பாடல்களைப் புலவர் சிதம்பரநாதன் எழுதுகிறார். இதே போல் மேலும் பல மலையாளப் படங்கள் மிக விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட வாய்ப் புள்ளது.
இவை அனைத்திலும் ஓவியாவை அவரது ரசிகர் கள் கண்டு ரசிக் கலாம். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி யில் பங்கேற்றதால் சில காலம் சமூக வலைத் தளங்களில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்தார் ஓவியா. இப்போது மீண்டும் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் வழி ரசிகர் களுடன் உரையாடி வருகிறார். இதற்கி டையே மேலும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அவரை தங்களது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுத்துள் ளதாகக் கேள்வி. அதற்காக ஓவியா சற்றும் எதிர்பார்த்திராத பெரும் தொகை ஒன்றை சம்பளமாகத் தருவதாகக் கூறியுள்ளனராம். ஓவியா சம்மதிப்பாரா எனத் தெரியவில்லை.

