சென்னை: நகைச்சுவை நடிகை மதுமிதா தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையில் அவரின் கையைக் கடித்துக்குதறிய சம்ப வம் நிகழ்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத் தில் நடிகர் சந்தானத்தின் காதலி யாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. அதன் பின் பல திரைப்படங் களிலும் பல சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். மதுமிதா தற்போது வளசர வாக்கத்தில் உள்ள அன்பு நகரில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை யடுத்து, மதுமிதா மீது உஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து விசா ரணைக்கு வருமாறு மதுமிதாவை போலிசார் அழைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மதுமிதா, நேராக உஷாவின் வீட் டிற்கு சென்று சண்டை போட்டுள் ளார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றியதில் உஷாவின் கையைப் பிடித்து மதுமிதா கடித் துள்ளார். தற்போது ஒருவர் மீது ஒருவர் கோயம்பேடு சந்தை காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
நடிகை மதுமிதா. படம்: தமிழக ஊடகம்

