சிவாவைப் பாராட்டிய நயன்தாரா

சிவாவைப் பாராட்டிய நயன்தாரா

2 mins read
bf1770f9-4c7a-47bb-a522-33a6a6d982c6
-

சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக நடித்துள்ள நயன்தாரா அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். இவர்கள் இணைந்து நடித்த 'வேலைக்காரன்' படத்தின் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. அதில் நயன்தாரா-சிவகார்த்திகேயன் இணையின் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, சிவகார்த்திகேயனைப் புகழ்ந்து தள்ளினார். "படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார். படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். அனைத்தையும் படித்துவிட்டு விரைவில் படப் பிடிப்பிற்குத் தயாராகிவிடுவார்.

"ஒரு நாள் இரவு நேர படப்பிடிப்பின்போது அவருக்குப் பல பக்கங்கள் கொண்ட வசனங்களைக் கொடுத்தார்கள். அப்போது அவர் 10 நிமிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் படித்துவிட்டு உடனே வந்து நடித்து முடித்துவிட்டார். "10 நிமிடத்தில் அவ்வளவு வசனங்களைப் பேசு வது என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் அவர் முடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர்," என்று கூறினார் நயன்தாரா. இதற்கிடையே, நயன்தாரா அடுத்த படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. கர்நாடகப் பெண் போலிஸ் அதி காரியான டிஐஜி ரூபாவின் வாழ்க்கை திரைப்படமாகத் தயாராகவுள்ளது. இப்படத்தில் ரூபா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு விதியை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக அம்பலப்படுத்தியவர் டிஐஜி ரூபா.

இந்தக் குற்றச்சாட்டுத் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவங்களை மையமாக வைத்து டிஐஜி ரூபாவின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்தைக் கன்னட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்க உள்ளார். இவர் ஏற்கெனவே ராஜீவ் காந்தி கொலை வழக் கில் தேடப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட 'ஒற்றைக்கண்' சிவராசன் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தவர். டிஐஜி ரூபா வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து அவரிடம் ஒப்புதல் பெற்று விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குநர் கூறினார். இதற்கான திரைக்கதை தயாராகி வருகிறது. ரூபாவும் சமூகவலைத்தளத்தில் தனது வாழ்க்கை திரைப்படமாக தயாராவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.