ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்தப் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் தாமிராவின் 'ஆண் தேவதை' படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக ஆறு வயது சிறுமிக்கு அம்மாவாக அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பற்றி கூறிய ரம்யா "ஜோக்கர் படத்தைப் போலவே 'ஆண் தேவதை' படத்திலும் எனக்குக் குடும்பப் பாங்கான வேடம்தான். தொடர்ந்து இதே மாதிரி கதா பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். "என்னை கவர்ந்த நடிகையான ரேவதியைப் போல சினிமாவில் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க வேண் டும் என்பதே எனது நோக்கம். "எந்த மாதிரியான கதையில் நடிக்க வேண்டும் எனத் திட்டமிடுவதில்லை. கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன்," எனக் கூறுகிறார்.
ரேவதியைப் போன்று நடிக்க ஆசைப்படும் ரம்யா
1 mins read
-

