ரெஜினா: வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்

ரெஜினா: வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்

1 mins read
aff4e628-ea12-41d6-afa4-93e2c38cd0e6
-

"வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலகட்டம் இருக்கிறது. இத்தனை ஆண்டு திரை வாழ்க்கையில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக் கிறேன். எதற்காகவும் நான் இப்போதைக்கு அவசரப்படவில்லை. மேற்கொண்டு நான் தனியாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் இதுதான்," என்று மனம் திறந்தார் ரெஜினா. 'மாநகரம்', 'ராஜதந்திரம்', 'சரவணன் இருக்க பயம் ஏன்', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா கெசன்ட்ரா. அவர் அண்மையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர் களிடம் மனம் திறந்து பேசினார். "இப்போதைக்கு என்னவோ அந்த வாழ்க்கையை வாழவேண்டும். இந்த அனுபவத்தை வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

"நான் இப்படி சொல்வதற்கு அர்த்தம் என்ன? அப்படி என்ன அனுபவம் கண்டுவிட்டீர்கள் என்கிறார்கள். நிஜம்தான். வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள் நிறைய. நான் ஒருவருடன் நட்பாக (காதல்) இருந்தேன். அந்த உறவு தற்பொழுது முறிந்துவிட்டது. அதுதான் இதற்கு காரணம் என்று எண்ணுகிறேன். தற்போது நான் தெளிவாக இருக்கிறேன். "இடையில் நான் நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டதற்கும் இதுதான் காரணம். எனவே இப்போதைக்கு யாருடனும் உறவாடப்போவதில்லை. "முதலில் என்னை நான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் முக்கியம். இன்னும் சில ஆண்டுகளுக்கு நான் தனி ஆளாகவே வாழ உணர்வுபூர்வமாக முடிவு செய்திருக்கிறேன்," என்றார்.