மக்கள் செல்வனைப் புகழும் இமான்

மக்கள் செல்வனைப் புகழும் இமான்

1 mins read
99c2744f-76fa-4c6e-9d2a-68dbce812e51
-

'மக்கள் செல்வன்' என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய் சேதுபதிதான் என்று இசையமைப்பாளர் இமான் 'கருப்பன்' பட விழாவில் பெருமையுடன் கூறியிருக்கிறார். இமான் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'கருப்பன்'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தன்யா, இயக்குநர் பன்னீர்செல்வம், சண்டை இயக்குநர் ராஜசேகர், பாடலாசிரியர் யுகபாரதி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது, "இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர்செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளி வரவில்லை. முதலில் 'கருப்பன்' படம்தான் வெளிவர இருக்கிறது. "மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரே நபர் விஜய் சேதுபதிதான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதம் என்னை வியக்க வைக்கிறது. நாயகனையே சுற்றிச் சுற்றி இந்தப் படம் இருக்கிறது. இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரக் கூடியது" என்று பெருமையாகக் கூறினார்.

'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி தோன்றும் காட்சி.