ரொக்கப் புழக்கம் அகல பயணிகள் ஊக்கம்

ரொக்கப் புழக்கம் அகல பயணிகள் ஊக்கம்

1 mins read

சிங்கப்பூரில் வரும் 2020ல் பொதுப் போக்குவரத்து முறையில் ரொக்கம் புழங்காத ஒரு நிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதி யாக நேற்று முதல் 11 எம்ஆர்டி நிலையங்களில் பயணிகள் சேவை நிலையங்களில் பயணிகள் பணத் தைக் கொடுத்து தங்கள் பயணச் சீட்டுகளில் தொகை ஏற்றும் நடை முறை முடிவுக்கு வந்தது. இருந்தாலும் பயணச் சீட்டு இயந்திரங்களிலும் பயணச் சீட்டு அலுவலகங்களிலும் இப் போதைக்கு பயணிகள் ரொக்கத் தைக் கொடுத்து அட்டைகளில் காசு ஏற்றிக்கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு முதல் எல்லா ரயில் நிலையங்களிலும் செயல் படும் பயணி சேவை நிலையங் களில் ரொக்கப் பணத்தைக் கொடுத்து பயணிகள் பயண அட்டைகளில் தொகையை ஏற்றிக் கொள்ள முடியாது. வரும் 2020வது ஆண்டு வாக்கில் எம்ஆர்டி நிலையங்களில் இருக்கும் பயணச் சீட்டு இயந் திரங்களில் எல்லாம் நெட்ஸ் போன்ற முறைகள் மூலம்தான் அட்டைகளில் காசு ஏற்றிக்கொள்ள முடியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் டிரான்சிட் லிங்க் நிறுவனமும் ஏற்கெனவே தெரி வித்து இருக்கின்றன. இதற்கிடையே, டிரான்சிட் நிறு வனம் 150 சேவை முகவர்களை நியமித்து பயணிகளுக்கு குறிப் பாக முதியவர்களுக்கு உதவி வருகிறது.