'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு வடிவேலு 100 வெளிநாட்டு நடனக் கலைஞர்களுடன் நடனமாட இருக்கிறார். சிம்புதேவன் இயக்கிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வடிவேலு நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகமான '24ஆம் புலிகேசி' படத்தை மீண்டும் சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த வாரம் வெளியானது. வடிவேலு மூன்று கதாபாத்தி ரங்களில் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி முதல் பாடல் காட்சியை எடுத்து முடித்துள்ளனர். தற்போது இரண்டாவது பாடலைப் படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் பாடலில் 100 வெளிநாட்டுக் கலைஞர்கள் இடம்பெற உள்ளனர். அவர்களில் 30 பேர் நடனக் கலைஞர்கள். இந்தப் பாடல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகா' நிறுவனம் தயாரித்து வருகிறது.
100 அயல்நாட்டு நடன கலைஞர்களுடன் வடிவேல்
1 mins read
-

