உறவை முறித்த ரஜினி படத்தின் நாயகி ஹுமா குரே‌ஷி

உறவை முறித்த ரஜினி படத்தின் நாயகி ஹுமா குரே‌ஷி

1 mins read
c328aeed-6c68-491b-8905-1c939f8dd2dd
-

ரஜினியுடன் 'காலா' படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு அதன் நாயகி ஹுமா குரே‌ஷி குறித்து அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அவற்றுள் அண்மைய தகவல் இது. சல்மான் கானின் இளைய சகோதரர் சோகைல் கானுடன் நெருக்கமாகப் பழகி வந்தார் நடிகை ஹுமா குரே‌ஷி . இது நட்பு ரீதியிலான உறவு என்று அவர் விளக்கம் அளித்தபோதிலும், கிசுகிசுக் கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் யார் கண் பட்டதோ, இந்த உறவில் விரி சல் ஏற்பட்டுள்ளது. தற்போது சோகைல் கானுடன் பேசுவதை, தொடர்பு கொள்வதை அறவே துண்டித்துவிட்டாராம் குரே‌ஷி. இதையடுத்து இசையமைப் பாளர் ஹிமேஷ் ரேஷம்மி இவரது புதிய நண்பராக உரு வெடுத்துள்ளதாகக் கேள்வி. இருவரையும் அவ்வப்போது ஒன்றாக பொது இடங்களில் பார்க்க முடிவதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் ஜோடியாக நடிப் பதால் ஹுமாவைப் பற்றித் தெரிந்துகொள்வதில் தமிழ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். இதற்கிடையே ரஜினி மிக எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றெல்லாம் பார்ப்பவர்களிடம் புகழ்ந்து தள்ளுகிறாராம் ஹுமா.