பிரியா நடிக்கும் 'மேயாத மான்'

பிரியா நடிக்கும் 'மேயாத மான்'

2 mins read
86a706c5-30d5-41be-9e72-4b8680aa5659
-

குறுகிய காலத்தில் தொலைக்காட்சி வழி மக்களைக் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். முதலில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் உடனுக் குடன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறினார். இதையடுத்து, தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கான வாய்ப் புகளும் தேடி வந்தன. சின்னத்திரையில் இவர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் பிரியாவின் சாந்த மான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் பாராட்டு தெரி வித்தனர். இது போதாதா? வெள்ளித்திரையிலும் நடிக்க வருமாறு பிரியாவுக்கு அழைப்பு விடுத்தனர் கோடம்பாக்கத்துப் புள்ளி கள். அதன் பலனாக 'மேயாத மான்' என்ற படத்தின் வழி நாயகி யாகத் தமிழ்த் திரையுலகில் கால் பதித்துள்ளார் பிரியா. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் தயாரித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது. திரையுலகம் மிகப் பிரம் மாண்டமான ஒன்று என்றா லும் தனக்கு அதனால் எந்தவிதப் பயமோ தயக் கமோ ஏற்பட வில்லை என்கிறார் பிரியா.

தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்காக எப்படி தினமும் தன்னைத் தயார்படுத்திக் கொள்வாரோ அது போலவே சினிமா படப்பிடிப்புக்கும் செல்கிறாராம். செய்யும் வேலையில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும், முழு அர்ப்பணிப் புடன் செயல்படவேண்டும் என்பதே தனது கொள்கை என்கிறார். "கதாநாயகியாக உயர்ந்துவிட்டோம். இனிமேல் நமக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என்றெல்லாம் நான் எதிர்பார்ப்ப தில்லை. எப்போதுமே வேலையில் நேர்மை யாக இருப்பேன். அதே நேர்மையுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். படம் வெளியானவுடன் மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் வேண்டுமானால் நாயகியாகி விட்டோம் என்ற எண்ணம் வரலாம்," என்று தனது வழக்கமான அகலச் சிரிப்பை உதிர்க்கிறார் பிரியா. அடிப்படையில் இவர் ஒரு பொறியாளர். தகவல் தொழில்நுட்ப நிபுணராகத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வருக்கு திடீரென அந்தப் பணி கசந்து போனதாம்.

உடனே வேலையை உதறிவிட்டு ஊடகத்துறைக்கு வந்துவிட்டார். "எனது முதல் படம் 'மேயாத மான்'. இதில் எனது கதாபாத்திரம் பக்கத்து வீட்டுப் பெண் போல சித்திரிக்கப்பட்டுள்ளது. மாறாக, வானத்தில் இருந்து இறங்கி வந்த காதல் தேவதையைப் போல் நடிக்கவில்லை. சாதாரணமான கல்லூரிப் பெண் வேடத்தில் நடித்துள்ளேன். என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ, அப்படித்தான் படத்திலும் இருப்பேன்.