'மிக மிக அவசரம்'

'மிக மிக அவசரம்'

2 mins read
c215ca8b-412f-4e48-8bf6-60c6b2c83d12
-

தமிழ்த் திரையுலகில் துணிச்ச லான தயாரிப்பாளர் என்று சுரேஷ் காமாட்சியைக் குறிப்பிடலாம். சமூகத்துக்கும் தான் சார்ந்துள்ள துறைக்கும் தேவையான கருத்துகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இவர் இயக்கி உள்ள முதல் படம் 'மிக மிக அவசரம்'. இதில் பெண் போலிசாரின் நிலையை, அவர்களுக்குள்ள பல்வேறு பிரச்சினைகளை யதார்த் தமாகப் பதிவு செய்துள்ளார். அண்மையில் இப்படத்தைத் தயாரிப்பாளர் தாணுவுக்குத் திரை யிட்டுக் காட்டியுள்ளது இப்படக் குழு. படத்தைக் கண்ட தாணு, படக்குழுவினரை மனமாரப் பாராட்டி உள்ளார். "இப்படி ஒரு படைப்பை நான் எதிர்பார்க்கவில்லை.

இது முற்றி லும் புதுமையான படைப்பு. தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் படம்," என்று மனதில் இருப்பதைப் படபடவென வெளிப் படுத்திய தாணு, இயக்குநரையும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தனித்தனியே குறிப்பிட்டு பாராட்டத் தவறவில்லை. நேரில் பாராட்டியது போதாது என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். "பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் உயரிய படைப்பாக தம்பி சுரேஷ் காமாட்சி இயக்கத் தில் உருவாகியுள்ள படம் 'மிக மிக அவசரம்'. இப்படைப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார் தாணு. அவரது இந்தப் பாராட்டும் உத்வேகமூட்டும் வார்த்தைகளும் பெரும் மகிழ்ச்சி அளித்திருப்பதாக சுரேஷ் காமாட்சி தெரிவித் துள்ளார். இயக்குநர் சீமான், ஸ்ரீபிரியங்கா, 'வழக்கு எண்' முத்துராமன், 'ஈ' பட இயக்குநர் ராமதாஸ், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி உள்ளிட்டோர் இப்படத் தில் நடித்துள்ளனர்.

'மிக மிக அவசரம்' படத்தின் ஒரு காட்சியில் ஸ்ரீபிரியங்கா