விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் போட்டுப் பார்த்த சூர்யா, அவற்றுள் சிலவற்றை மாற்ற வேண்டும் என்று இயக்குநரிடம் கூறி இருப்பதாகவும், இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என்றும் அண்மையில் ஒரு தகவல் பரவியது. இதனால் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அது பொய்யான தகவல் எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். திட்டமிட்டபடியே படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடந்து வருவதாகவும் குறித்த நேரத்தில் படம் வெளியாகும் என்றும் விக்னேஷ் சிவன் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்'
1 mins read
-

