திருமணம் செய்துகொண்ட பின் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறும் ஆண்களைத் தாம் இதுவரை சந்தித்ததே இல்லை என்கிறார் இந்தி நடிகை கங்கனா ரணாவத். இதற்கிடையே கங்கனா ரணா வத் திரையுலகில் நடிக்கவந்த புதிதில் பல ஆண்கள் தன்மீது கண்வைத்ததாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் வெளிப்படை யாகத் தெரிவித்துள்ளார். "திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர், இளைஞர்கள், முதிய வர்கள் எனப் பலர் என்னை விரும்பினர். என்னோடு வாழ வேண்டும் என்றும் தெரிவித்தனர். "எந்தத் துறையாக இருந்தாலும் ஆண்களை நிராகரித்தால் அவர் கள் மோசமாக நடந்துகொள்வார்கள். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்படும். அதுவும் உடன் பணியாற்றும் ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்தால் பிரச் சினைதான். எனவே இத்தகைய நிலையைத் தவிர்ப்பது நல்லது," என்கிறார் கங்கனா ரணாவத். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூறும் கண்ணீர்க் கதைகளைத் தம்மால் நம்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், 25 வயதுக்குள் இருக்கும் ஓர் ஆண், மற்றொரு பெண்ணின் கணவர் என்பதையும் மறந்து, சிறந்த கணவராக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சிக்கலைத் தவிர்ப்பது நல்லது: கங்கனா கூறும் அறிவுரை
1 mins read
-

