இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனத் திரைத்துறையில் பல்வேறு அவதாரங்களை வரிசையாக எடுத்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது புதிய பொறுப்பு ஒன்றைச் சுமக்க தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. அடுத்து தனது புதிய படத்தில் நாயகனாக நடிப்பதுடன், அதன் படத்தொகுப்பு (எடிட்டிங்) பணியையும் அவரே மேற்கொள்ள இருக்கிறாராம். தற்போது 'அண்ணாதுரை', 'காளி' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இவற்றுள் 'அண்ணாதுரை'யில் அவருக்கு இரு கதாபாத்திரங்கள். ஆசிரியர், மதுவுக்கு அடிமையானவர் என இரு வேடங்களிலும் அசத்தி உள்ளாராம். இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்புப் பணியையும் விஜய் ஆண்டனியே மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தொகுப்பில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடியாம். விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் 'காளி'யை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.
படத்தொகுப்பாளரான விஜய் ஆண்டனி
1 mins read
-

