சேரனின் பாடலைப் பாராட்டும் இயக்குநர்

சேரனின் பாடலைப் பாராட்டும் இயக்குநர்

1 mins read
23edfe9f-6cb3-4d17-8dc7-ab7dca3688ff
-

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கும் முதல் படம் 'மிக மிக அவசரம்'. இப்படத்திற்கான கதையை ஜெகன் எழுதியுள்ளார். ஒரு நாள் இயக்குநர் சேரனைச் சந்தித்து இந்தக் கதையை விவரித்தாராம் சுரேஷ் காமாட்சி. கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே "இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதுகிறேன்" என்று கூறி பாடலாசிரியர் ஆகிவிட்டார் சேரன். கையோடு, 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...' எனத் தொடங்கும் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார். அப்பாடலை இஷான் தேவ் இசையமைத்துப் பாடியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என்கிறார் சுரேஷ் காமாட்சி. இப்பாடல் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.