வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது 'நாடோடி கனவு'. இதில் சில ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக ரசிகர் களைக் கவர்ந்த மாஸ்டர் மகேந் திரன் நாயகனாக நடித்துள்ளார். இவரது ஜோடி சுப்ரஜா. மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்கி உள்ளார். சரி... படத்தின் கதை என்ன? பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள் என்பது தெரிந்த சங்கதி. ஆனால் இந்தப் படத்தில் எல்லாமே தலைகீழாக இருக்குமாம்.
காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமாம். இதனால் வேறு வழி யின்றி ஊர் மக்கள் அனைவரும் ஊரைக் காலி செய்கிறார்கள். எதனால் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை, காட்சி அமைப்பின் மூலம் விவரிக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவிக்கின் றனர். படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவை விஷப்பூச்சி ஒன்று கடித்து விட்ட தாம். இதனால் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பெற்ற பின்னர் சிறிதும் ஓய்வு எடுக்காமல் படப்பிடிப்பில் பங் கேற்று அசத்தி உள்ளார்.
'நாடோடி கனவு' படத்தில் மாஸ்டர் மகேந்திரன், சுப்ரஜா.

