தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருவதாகவும் வெளியான தகவலை அடியோடு மறுத்துள்ளார் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார் அவர். "சளி, இருமல் என்று மருத்துவமனைக்குச் சென்றால் கூட அதைப் பெரியதாக்கி உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு எனது சகோதரி உயிரிழந்து விட்டார். அதற்காகத்தான் நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன். "எதற்காக என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளைப் பரப்பாதீர்கள். நான் நலமாக இருக்கிறேன்," என்று எஸ்பிபி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலா: நான் நலமாக இருக்கிறேன்
1 mins read
-