'கருப்பன்' படத்தில் நடித்த அனுபவத்தை வாழ்நாள் முழுவ தும் மறக்க இயலாது என்று கூறியுள்ளார் அதன் நாயகி தான்யா. இது மதுரை மண் ணுக்கே உரிய வாசத்துடன் உருவாகி உள்ள படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளார். 'கருப்பன்' படத்தில் மதுரை தமிழில் பேசி நடிக்க சிரமப்பட்டா ராம். அதனால் வேறொருவர் இவருக்காகப் பின்னணி பேசி உள்ளார். "படம் முழுவதும் மதுரையின் மண்வாசம் மணக்கும். மதுரைப் பெண்ணாக எனது கதாபாத்திரம் அமைந்ததால் என் நடிப்பை நன்கு வெளிப்படுத்த முடிந்தது.
நான் இதற்கு முன் நடித்த படங்களை விட 'கருப்பன்' மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நிச்சயம் முக்கிய இடத்தைப் பிடிப்பேன்," என்கிறார் தான்யா. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததே தனக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கூறுபவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிப்பதே தனது இலக்கு என்கிறார். "இப்படத்தில் அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக திரையில் வலம் வருவேன்," என்று சொல் லும் தான்யா, அருள்நிதியுடன் 'பிருந்தாவனம்' படத்தில் நடித்த வர். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்தி ரனின் பேத்தி என்பதும் குறிப் பிடத்தக்கது.
'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதி, தான்யா.

