தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களைக் குறைவாக மதிப்பிடும் காலம் மாறவேண்டும் - ஜோதிகா

1 mins read
bbde028e-7fbb-42e9-95a8-345a4e2b658e
-

திருமணத்திற்குப் °பிறகு '36 வயதினிலே' படம் மூலம் மீண்டும் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார் நடிகர் சூர்யா வின் மனைவி ஜோதிகா. இப்படத்தைத் தொடர்ந்து, 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில், 'மகளிர் மட்டும்' என்ற படத்தில் ஜோதிகா நடித்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து படம் திரைக்கு வரத் தயாராக உள்ள நிலையில் ஜோதிகா அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு மருமகள், தன்னுடைய மாமியாரை யும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதே 'மகளிர் மட்டும்' படத் தின் கதை.

"இந்தக் கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மூத்த நடிகைகளான ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானு ப்ரியா ஆகியோருடன் இணைந்து நடிக்கும்போது எனக்குப் பயமாக இருந்தது. "எங்களின் முதல் நாள் படப் பிடிப்பு ஒரு படகில் வைத்து நடை பெற்றது. அப்போது என்னால் சரி யாக வசனம் பேசி நடிக்க முடிய வில்லை. அப்போது அவர்கள்தான் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்கள். ஊர்வசி யிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.