'துப்பறிவாளன்' படத்தின் நாயகன் விஷாலும் நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமியும் காதலித்து வரு வதாக தமிழ்த் திரையுலகில் பேசப்படும் நிலையில், விஷாலுக்கே வில்லியாக மாறியிருக்கிறார் வரலட்சுமி. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் 'சண்டக்கோழி'. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
விஷாலின் 25வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் வரலட்சுமி சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப் பட்டு வந்தது. ஆனால், அண்மைத் தகவலின்படி இப்படத்தில் வரலட்சுமி விஷாலுக்கு வில்லியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 'துப்பறிவாளன்' படம் பற்றி பேசிய விஷால், "என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல் லாமல் வெளியாகும் முதல் படம் 'துப்பறிவாளன்' தான். "நல்ல கதையம்சம் கொண்ட படத்தைப் பார்க்க ஆவலாக இருக் கும் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.
"'துப்பறிவாளன்' படம் வெளி யான பின் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். "என்னுடைய நடிப்பில் அடுத்து 'இரும்புத்திரை', 'சண்டக்கோழி-2', 'டெம்பர்' படத்தின் தமிழ் தயாரிப்பு என்று வித்தியாசமான படங்கள் வரவுள்ளன," என்றார். என்றார். வில்லியான காதலி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர் சங்கம் பற்றி பேசிய விஷால், "திரையுலகத்தைக் காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படங்கள் தள்ளிப்போனது எனக்கு நஷ்டம்தான். ஆனால் திரையுலகம்தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம்.

