அரசியல்வாதியாக மாறிய அருள்நிதி

அரசியல்வாதியாக மாறிய அருள்நிதி

1 mins read
7fea2d51-d675-4b89-b2b4-5cf2e81f9cb6
-

சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி அடுத்ததாக 'புகழேந்தி எனும் நான்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல் சம்பந்தப்பட்ட இக்கதையைக் கரு.பழனியப்பன் இயக்க இருக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அருள்நிதி தீவிர அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப 'புகழேந்தி எனும் நான்' படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நடிப்பில் தற்போது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் உருவாகி வருகிறது. இதில் இவருடன் அஜ்மல், மகிமா, சாயா சிங், சுஜா வருணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாறன் இப்படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது.