வெளியீட்டிற்கு முன்பே சாதனை படைத்து வரும் 'மெர்சல்'

வெளியீட்டிற்கு முன்பே சாதனை படைத்து வரும் 'மெர்சல்'

1 mins read
8b454715-7189-4ce8-b0e6-098eeb02692f
-

படம் வெளியாவதற்குள் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திவிடும் போல் இருக்கிறது 'மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகின. 'ஆளப்போறான் தமிழன்', 'நீதானே', 'மெர்சல் அரசன்', 'மாச்சோ' உள்ளிட்ட பாடல்களில் இடம்பெற்ற வரிகளையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இவற்றுள் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வரிகள் அடங்கிய காணொளியை இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்துள்ளனராம்.

தமிழ்ச் சினிமா வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என்று 'மெர்சல்' படக்குழுவினர் துள்ளிக் குதிக்கிறார்கள். தீபாவளி சமயத்தில் வெளியாக உள்ள 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மொத்தம் மூன்று நாயகிகள். இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் மிக விரைவில் வெளியாக உள்ளது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.