நிக்கி: சவால் நிறைந்த வேடங்களே பிடிக்கும்

நிக்கி: சவால் நிறைந்த வேடங்களே பிடிக்கும்

1 mins read
b21a16b6-130b-474a-b3ae-5d598ca7eff0
-

பலரும் நடிக்கத் தயங்கும் கதைகளைத் தேர்வு செய்வதே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் நிக்கி கல்ராணி. அம்மணியின் சந்தை நிலவரம் நாளுக்கு நாள் வலு வடைந்துகொண்டே போகிறது. முன்னணி நாயகர்களின் படங்களில் நடிப்பதற்கு வரிசையாக ஒப்பந்தமாகி வருகிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராகி உள்ள 'ஸ்பைடர்' படத்தில் நிக்கியின் இயல்பான நடிப்பும் அளவான கவர்ச்சியும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சென்னை, ஹைதராபாத் என இரு தினங்களுக்கு ஒருமுறை விமானத்தில் பறந்துகொண்டே இருக்கிறார் நிக்கி.

இவரது பேட்டியும் படமும் இல்லாமல் முன்னணிப் பத்திரிகைகள் வெளியாவதில்லை என்கிற அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெற்றி பெற்றதாலேயே ரசிகர்கள் தன்னைப் பாராட்டுவதாகச் சொல்கிறார் நிக்கி. "தற்போது தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரு கிறேன். ரசிகர்களின் அன்பும் பாராட்டும் ஆதரவும் எனக்கு இந்த இடத்தைக் கொடுத்து இருக்கிறது. "பலரும் நடிக்கத் தயங்கும் கதைகளை நான் விரும்பித் தேர்வு செய்கிறேன். அதுபோன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் மனதுக்குப் பிடித்த சவாலான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன்.