இரட்டையர் வேடத்தில் விஜய் ஆண்டனி

இரட்டையர் வேடத்தில் விஜய் ஆண்டனி

1 mins read
8e18a532-0be5-4416-9025-539101ab6685
-

விஜய் ஆண்டனி நடிக்கும் படங் கள் என்றாலே ரசிகர்கள் மத்தி யில் எதிர்பார்ப்பு அதிகமாகி விடு கிறது. அவரும் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் படத்துக்குப் படம் மாறுபட்ட கதைகளில், கதா பாத்திரங்களில் நடித்து வரு கிறார். இந்நிலையில் அவர் தற்போது நடித்து வரும் 'அண்ணாதுரை' படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இரு கதாபாத்திரங்களாம். அதாவது இரட்டையர்களாக நடித்துள்ளா ராம். இப்படத்தை தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற பெயரில் வெளியிடுகின்றனர். அண்மை யில் தெலுங்குப் பதிப்பின் முதல் சுவரொட்டியை சிரஞ்சீவி வெளி யிட்டார். இதற்கு தெலுங்கு ரசிகர் கள் மத்தியில் நல்ல வரவேற்பாம்.

'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்பின்போது.