இன்ப அதிர்ச்சி தந்த தங்கு விடுதி

இன்ப அதிர்ச்சி தந்த தங்கு விடுதி

1 mins read
0a00fd52-a448-4764-b4e2-29d886d0c2d7
-

கோவாவில் உள்ள நட்சத்திர தங்குவிடுதி நிர்வாகம் நடிகை திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து அசத்தி உள்ளது. படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் வெளிநாடு அல்லது உள்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது திரிஷாவின் வழக்கம். குறிப்பாக அதிக கடற்கரைகள் கொண்ட கோவாவுக்குச் செல்வது என்றால் இவருக்கு ரொம்ப இஷ்டம். அதிலும் கோவாவில் உள்ள குறிப்பிட்ட நட்சத்திர தங்குவிடுதியில் தான் அவர் தொடர்ந்து தங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடித்து வரும் 'ஹே ஜூட்' என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்புக்காக அண்மையில் கோவா சென்றுள்ளார் திரிஷா. அவர் வருவதை அறிந்த விடுதி நிர்வாகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளது. எதற்கு இந்தப் புது மாதிரியான கவனிப்பு என்று யோசித்தபடியே தனது அறைக்குச் சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வேறொன்றுமில்லை. அந்த அறையில் உள்ள மேசையில் 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட திரிஷாவின் படத்தை ஃபிரேம் செய்து வைத்திருந்தனராம். மேலும் அவருக்குப் பிடித்தமான கேக் ஒன்றும் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்ததாம். நீங்கள் எங்களுக்கு சிறப்பு விருந்தினர் என்று விடுதி நிர்வாகத்தினர் கூறியதைக் கேட்டு பூரித்துப் போயிருக்கிறார் திரிஷா.