மாறத் துடிக்கும் கீர்த்தி சுரே‌ஷ்

மாறத் துடிக்கும் கீர்த்தி சுரே‌ஷ்

1 mins read
b97d624a-d929-407a-9c53-0cdc674075f6
-

அண்மைய சில மாதங்களாக கீர்த்தி சுரே‌ஷின் போக்கில் பெரிய மாற்றத்தை காண முடிவதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன. விஷயம் இதுதான். முன்பை விட தற்போது நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம். ஒவ்வொரு காட்சிக்கும் இயக்கு நரிடம் ஆலோசனை கேட்கத் தவறுவதே இல்லையாம். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சாவித்திரியாக கீர்த்தியும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்து வரு கின்றனர். இந்தப் படத்துக்காகத் தான் தன்னையே மாற்றிக் கொண்டு, மேற்குறிப்பிட்டவாறு நடந்து கொள்கிறார் கீர்த்தி.

தனது நடிப்பு கச்சிதமாகவும் இயல்பாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சாவித்திரி நடித்த பழைய படங்களை திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறார். சாவித்திரியின் நடை, உடை, பாவனை என அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதை தன் நடிப்பில் வெளிப் படுத்த பயிற்சியும் மேற் கொள்கிறார். "இப்படி அதிகம் மெனக்கெட்டாலும் கூட தனது நடிப்பில் கீர்த்திக்கு நூறு விழுக்காடு திருப்தி ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதனால் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறார். "கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனினும் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநரிடம் ஆலோசனை கேட்கிறார்.