அஞ்சலியைப் பின்பற்றும் அனுஷ்கா

அஞ்சலியைப் பின்பற்றும் அனுஷ்கா

1 mins read
9a6ee6c7-c0c1-44b0-93e7-63cc11b93640
-

வித்தியாசமாக நடிக்கவேண்டும், ரசிகர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தனது உடல் எடையை அதிகரித்து இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார் அனுஷ்கா. ஆனால் அவரது கெட்ட நேரம் அதன் பிறகு அவரால் உடல் இளைக்கவே முடியவில்லை. கடந்த சில தினங்களாக தீவிர யோகாசனம், உடற்பயிற்சி என்று நாள் முழுவதும் சிரமப்பட்டு தனது உடலை இளைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அம்மணி. இந்நிலையில் தன்னைப் போலவே உடல் பெருத்து இருந்த நடிகை அஞ்சலி, திடீரென மிகவும் இளைத்து, அழகான தோற்றத்துடன் வலம் வரும் புகைப்படங்களைக் கண்டு அசந்து போனாராம். அனுஷ்காவைப் போன்றே உடல் பெருத்து அவதிப்பட்டார் அஞ்சலி. ஆனால் இடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பேரங்காடிக்கு வந்த அவரைக் கண்டு ரசிகர்கள் அசந்து போயினர். உடல் மெலிந்து அம்சமாக காட்சியளித்த அவருடன் பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வழி வேகமாகப் பரவின. அவற்றைக் கண்ட அனுஷ்கா உடனடியாக அஞ்சலியைத் தொடர்பு கொண்டாராம். இதையடுத்து உடல் இளைப்பதற்கான குறிப்புகளை அஞ்சலி வழங்க, அவற்றை அனுஷ்கா முறையாகப் பின்பற்றி வருவதாகத் தகவல்.