தாய்லாந்து யானைகளோடு வலம் வருகிறார் ‌ஷிவானி

தாய்லாந்து யானைகளோடு வலம் வருகிறார் ‌ஷிவானி

16 Sep 2017 - 6:10 am

1 mins read

'கும்கி-2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வரும் நிலையில் அதன் நாயகியான ‌ஷிவானியும் படக்குழு வினரும் அங்குள்ள யானைகளோடு வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான 'கும்கி' வெற்றிப் படமாக அமைந்தது. இதில் விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் அறிமுகமானார்கள். பின்னர் 'கயல்', 'தொடரி' படங்களை இயக்கினார் பிரபு சாலமன். தற்போது மீண்டும் 'கும்கி' படத்தின் 2வது பாகத்தை பிரபுசாலமன் இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகனான மதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ‌ஷிவானி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தாய்லாந்தில் தொடங்கியது. அங்குள்ள அடர்ந்த காடுகளில் யானைக் கூட்டங்களுடன் படமாகி வருகிறது. இதுவும் யானையை மையமாகக் கொண்ட படம் என்பதால் தாய் லாந்தில் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். யானைகள் தொடர்பான அனைத்துக் காட்சிகளையும் அங்கு படமாக்கிய பிறகு இந்தியா திரும்புகிறார்கள். உச்சக்கட்ட காட்சிகளும் தாய்லாந்து காடுகளிலேயே படமாக்கப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.