விஜய்க்கு விட்டுக்கொடுத்த விக்ரம்

விஜய்க்கு விட்டுக்கொடுத்த விக்ரம்

1 mins read
5bd9a19b-3fd6-482f-9060-1e7b07a5715f
-

ஒரே நாளில் பல பெரிய நடிகர் களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கப்படுகிறது என் பதை உணர்ந்த நடிகர்கள் இப் போதெல்லம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப் பட்டியலில் தற்போது சேர்ந்துள்ளார் 'ஸ்கெட்ச்' விக்ரம். விஜய்யின் மெர்சலுக்காக விட்டுக் கொடுத்துள்ளார் விக்ரம். முன்பெல்லாம் பொங்கல், தீபாவளி என்றால் இனிப்புத் தவிர ரசிகர்களுக்குத் தங்களது விருப்ப நட்சத்திரங்களின் படங்களும் வெளியாகி குதூகலப்படுத்துவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆரவாரம் குறைந்திருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் ஒரே நாளில் வெளியீடு செய்யப்படாமல் தவிர்க்கப் படுகிறது. படங்கள் திருடப்பட்டு இணை யத்தில் வெளிவருவதே இதற்கு முக்கிய காரணம். இந்தப் பிரச்சினை இல்லாத நேரத்தில் சுமாரான படங்கள்கூட 100 நாள் ஓடிக் கல்லாவை நிறைத்துவிடும். தற்போது 3 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயமாகி விட்டது.