மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா

1 mins read
8c934338-e3f9-4ce9-8110-4595102eada9
-

தமிழில் 'களவாணி' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்த ஓவியா 'போலிஸ் ராஜ்யம்' படத்தில் நடித்திருக்கிறார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்ற பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஜெமினி கிரண், கலாபவன் மணி, பாபுராஜ் உள்ளிட்டோர் நடித் திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்து உள்ளார். இயற்கை வளம் கொஞ்சும் கிரா மத்தில் அப்பா, அம்மா, குழந்தை கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கின்றன. கொலைகள் மட்டுமல்ல, அந்த ஊரில் பல்வேறு அசம் பாவிதங்களும் அரங்கேறு கின்றன. அது ஏன், கொலைகளைச் செய்வது யார் என துப்புத்துலக்க முடியாமல் உள்ளூர் போலி சார் தடுமாறுகின்றனர். இந்நிலையில், தொடர் கொலைகள் நிகழக் கார ணம் என்ன, குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் சிறப்புப் புலனாய்வு அதிகாரியாக பிருத்விராஜ் நியமிக்கப் படுகிறார்.

தொடர் கொலைக்கான காரணத்தையும் குற்றவாளியை யும் கண்டுபிடித்துக் கொலைகாரனை பிருத்விராஜ் கைது செய்து விசாரணை செய்கிறபோது அதிர்ச்சிகரமான தக வல்கள் வெளிவருவதுதான் 'போலிஸ் ராஜ்யம்' படத்தின் திரைக்கதை. பொய்யான கொலைக் குற்றவாளியாக இப்படத்தின் இயக்குநர் பாபுராஜா நடித்து இருக்கிறார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் உறக்கத்தைத் திருடிய ஓவியா இப்படத்தில் ரசிகர்களைக் கலங்கடிக்கும் கவர்ச்சி நாயகியாக நடித்திருக்கிறார்.