பாலியல் தொழிலாளியாக ரித்விகா

பாலியல் தொழிலாளியாக ரித்விகா

1 mins read
7629ae2a-403c-47a1-aa91-79f33d4af372
-

தற்போது புதிய படம் ஒன்றில் தான் எதிர்பார்த்ததை விட சவாலான வேடம் அமைந்திருப்பதாக பூரிப்புடன் சொல்கிறார் ரித்விகா. 'மெட்ராஸ்' படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து, பின்னர் 'கபாலி', 'ஒரு நாள் கூத்து', 'இருமுகன்' உள்பட பல படங்களில் நடித்த வகையில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இவர். பின்னர் கவர்ச்சியாக நடிக்கும்படி சிலர் அழைப்பு விடுத்தபோது, அதிக சம்பளம் கிடைத்தாலும் தேவையில்லை என்று கூறி அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த ரித்விகா, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது நடிகை சதா கதை நாயகியாக நடித்து வரும் 'டார்ச்லைட்' படத்தில் ரித்விகாவுக்கு பாலியல் தொழிலாளி வேடமாம். "கதைப்படி இது மிகவும் முக்கியமான பாத்திரம். 'மெட்ராஸ் படத் துக்கு பிறகு இந்தப் படம் என்னைப் பற்றி பெரிதாக பேச வைக்கும் படைப்பாக இருக்கும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.