முன்பிணை கோரும் காவ்யா மாதவன்

முன்பிணை கோரும் காவ்யா மாதவன்

1 mins read
27c7bdae-457e-4774-831b-66bcc1206712
-

பிரபல நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் முன்பிணை கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கில் கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் நடிகர் திலீப். அவருக்கு இதுவரை பிணை கிடைக்கவில்லை. இந்நிலையில், காவ்யா மாதவன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். திலீப்பின் பிணை மனுவை நீதிமன்றம் பலமுறை நிராகரித்துள்ள நிலையில், காவ்யாவுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், நடிகை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள 'மேடம்' பெயரை வெளியிடுவேன் என்று கூறி இருந்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட பெண், நடிகை காவ்யா மாதவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது பயம் காரணமாகவே அவர் தற்போது முன்பிணை கோரியுள்ளார்.