'விதி மதி உல்டா'

'விதி மதி உல்டா'

1 mins read
4309ba61-1afe-4992-81fe-1a7aefd26d2a
-

'டார்லிங் 2' படத்தில் நடித்தவர் ரமீஸ் ராஜா. இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் 'விதி மதி உல்டா'. இதில் அவருக்கு ஜோடி யாக ஜனனி அய்யர் நடித்துள்ளார். முருகதாசிடம் உதவி இயக்குந ராகப் பணியாற்றிய விஜய் பாலாஜி இப்படத்தை இயக்குகிறார். ரைட் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. "மனிதன் கனவில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிஜமாகி நேரில் வந்தால் மனித வாழ்க்கையே விபரீதமாகிவிடும். அந்த விபரீதமே விதியானால் துவண்டுவிடக் கூடாது. "மாறாக அந்த விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியாதா என யோசிக்க வேண்டும். இவ்வாறு யோசித்துச் செயல்பட வேண்டும் என்பதையே இப்படம் வலியுறுத்து கிறது," என்கிறார் விஜய் பாலாஜி. அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நட்புக்காக அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளாராம். 'தாறுமாறா ஒரு பார்வை பார்க்க நேர்மாறா என்ன அடிச்சி தூக்க...' என்பது அப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி.

'விதி மதி உல்டா' படக்காட்சியில் ரமீஸ் ராஜா, ஜனனி அய்யர்.