வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துக்கு தயாராகி வருவதாகத் தகவல். அது மட்டுமல்ல; இம்முறை அவர் ஓர் அரசியல் தலைவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது புதுத் தகவல். 'அண்ணாதுரை', 'காளி' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதையடுத்து நடிகரும் இயக்குநருமான சீமான் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். முன்பு விஜய் நடிக்க 'பகலவன்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார் சீமான். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. தற்போது அதே கதையை விஜய் ஆண்டனியை வைத்து அவர் உருவாக்க இருப்பதாகக் கேள்வி.
சீமான் இயக்கத்தில் விஜய் ஆண்டனி
1 mins read
-

