அரசியலில் மட்டுமல்ல, திரையுலகத்திலும் கூட யார் எப்படி மாறுவார்கள், காட்சிகள் எப்படி மாறும் என்பதையெல்லாம் யூகிக்கவே இயலாது. ஒரு காலத்தில் விக்ரமும் இயக்குநர் கௌதம் மேனனும் முட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது. அதேபோல் சூர்யாவுடனும் மனக் கசப்பு ஏற்பட்டதாக கௌதமே வெளிப்படையாகத் தெரிவித் தார். அதற்காக கடைசி வரை அதே மனக்குறையுடன் கருத்து வேறுபாடுகளுடன் சென்று கொண்டிருக்க முடியுமா? காலம் சில மனப் புண்களை மாற்றியதன் விளைவு, பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த வகையில் கௌதம் மேனனின் 'துருவ நட்சத் திரம்' படத்தில் நாயகனாக ந டி த் து க் கொ ண் டி ரு க் கி றார் விக்ரம். தற்போது துருக்கியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகி றது. இதற்காக விக்ரம் ரொம்பவே மெனக்கெடுகிறா ராம். அவருக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்வது மட்டும் போதாது என்று கௌதம் மேனன் நெகிழ்கிறார். "சில தருணங்களில் மிக அற்புதமான, நேர்த்தியான திறமைசாலிகள் தங்களை வெளிப்படுத்தும்போது, அந்த திறமைசாலியின் நிழலில் ஒதுங்கி நிற்பதே சிறந்த செயல்," என விக்ரமைக் குறிப்பிட்டு, தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கௌதம்.
விக்ரமை பாராட்டும் கௌதம்
1 mins read
-

