கார்த்தி நடித்திருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று'

கார்த்தி நடித்திருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று'

1 mins read
ef015f97-6b5b-498a-a2d2-db54acd09cfd
-

கார்த்தி நடித்திருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. அதற்கும் முன்பு இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் விஜய்யின் 'மெர்சல்' படமும் வெளியாக இருக்கிறது. மேலும் பல படங்கள் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி 'தீரன் அதிகாரம் ஒன்று' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் 17ஆம் தேதி முன்னோட்டம் வெளியிடப்படுகிறது. இப்படத்தில் கார்த்தி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.