தமிழகத்தில் பரபரப்பையும் விவாதங்க ளையும் எழுப்பியுள்ள பல்வேறு விவ காரங்களில் சிலை கடத்தல் விவ காரமும் ஒன்று. இந்நிலையில் சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது 'களவுத் தொழிற்சாலை'. சிலை கடத்தல் தொடர்பாக தமிழக காவல்துறை பலரை வரிசையாகக் கைது செய்துவரும் நிலையில் இப்படம் வெளியாகிறது. அது மட்டுமல்ல, காவல்துறை உயரதிகாரி ஒருவரும் கூட கைதாகியுள்ளார். இப்படியொரு கதையைப் படமாக்கத் தோன்றியது ஏன் என்பது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணசாமி விளக்கம் அளித்துள்ளார். "திரைப்படங்களில் இணை இயக்கு நராகப் பணியாற்றிக்கொண்டே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளராகவும் செயல்பட்டேன். ஒருமுறை தமிழகத்தில் இருந்து காணாமல் போன விலைமதிக்க முடி யாத மரகதலிங்கத்தை மீட்டுக் கொண்டு வந்தது குறித்து போலிஸ் அதிகாரி அளித்த பேட்டியைக் காண நேர்ந்தது.
'களவுத் தொழிற்சாலை' படத்தில் இடம்பெறும் காட்சியில் கதிர், குஷி.

