ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் தரும் 'கருப்பன்'

ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் தரும் 'கருப்பன்'

1 mins read
579fcf3b-ef8e-4c54-9c28-d60a2dd4ea40
-

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'கருப்பன்'. இதில் அவரது ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் பாபி சிம்ஹா, கிஷோர், பசுபதி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் உள்ளனர். இப்படத்தை பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். இது மாடுபிடி வீரரின் கதை எனக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனராம். மேலும் அடிதடி சண்டைக் காட்சிகளும் இளையர்களைக் கவரும் வகையில் இருக்குமாம். இதற்கிடையே அடுத்ததாக 'எடக்கு' என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இது உருவாகி வருகிறது. சேலம், தர்மபுரி, பெங்களூரு நெடுஞ்சாலைகளிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தை எஸ்.சிவன் இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி, தன்யா ரவிச்சந்திரன்