வரலட்சுமிக்கு குவியும் வாய்ப்பு

வரலட்சுமிக்கு குவியும் வாய்ப்பு

1 mins read
d24a0c1d-ca49-4ca4-898f-2e28a78296c5
-

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக் கும் கதைக்களத்துடன் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ள வரலட் சுமிக்கு வாய்ப்புகள் குவிந்து வரு கின்றன. அண்மைக்காலமாக இயக்குநர் கள், தயாரிப்பாளர்களின் பார்வை இவர் பக்கம் திடீரென திரும்பி உள்ளது. 'சண்டைக் கோழி 2'ஆம் பாகத்தில் இவர் வில்லியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மிஷ்கினிடம் உதவி இயக்கு நராக பிரியதர்‌ஷினி இயக்கும் படம் இது. "இது வழக்கம்போல் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையேயான மோதலைக் கூறும் படம். ஆனால் பெண்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத் திருக்கிறோம். கதைப்படி, நாயகனை விட நாயகிக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்.

"இந்தக் கதையை உருவாக்கியதுமே வரலட்சுமிதான் இதற்கு ஏற்ற நாயகி எனத் தோன்றியது. உடனடியாக அவரை அணுகி கதையைச் சொன்னபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். "இது அதிரடிகள் நிறைந்த கதை. எனவே வரலட்சுமிக்கு மிகப் பொருத்த மாக இருக்கும். அவரது மிடுக்கான தோற்றமும் கதையோட்டமும் ரசிகர் களைப் படத்தில் ஒன்றிப்போக வைக்கும்," என்கிறார் பிரியதர்‌ஷினி. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் காதல், டூயட் ஆகியவற்றுக்கு அதிக இடமில்லையாம். காதல் காட்சிகள் இல்லாத வகையில் கதையோட்டத்தை அமைத்துள்ளனராம். படத்தின் நாயகன் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை. பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்வதை விட கதைக்கு ஏற்ப ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.