பா.தண்டபாணி இயக்கத்தில் உருவாகும் படம் 'குரு உச்சத்துல இருக்காரு'. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாம். ஜீவா நாயகனாகவும், ஆரா நாயகியாகவும் நடித்துள்ளனர். "இது தமிழ்ச் சினிமாவை புரட்டிப் போடும் படம், இந்திய சினிமாவில் சொல்லப்படாத கதை, ஹாலிவுட்டுக்கு இணையான படைப்பு என்றெல்லாம் சொல்லி பந்தா செய்ய விரும்பவில்லை. இது ஜாலியான நகைச்சுவைக் கதை. இந்தக் காலகட்டத்துக்குத் தேவையான நல்ல கருத்தைச் சொல்லப் போகிறோம்," என்றார் தண்டபாணி.
ஜீவா, ஆரா.

