வித்தியாசம் காட்ட மெனக்கெட்ட கார்த்தி

வித்தியாசம் காட்ட மெனக்கெட்ட கார்த்தி

1 mins read
d8c2daa6-2ed3-4a9f-8b98-fc401e852e59
-

"ஏற்கெனவே 'சிறுத்தை' படத்தில் ரத்னவேல் பாண்டியன் என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. இப்போது மீண்டும் காவல் துறை அதிகாரி வேடத்தை ஏற்றுள்ளார். இரு பாத்திரங்களுக்கும் இடையே வித்தியாசம் காண்பிக்க ரொம்பவே மெனக்கெட்டுள்ளாராம். எப்படி? "'சிறுத்தை'யில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீரமாக அதிரடி வசனம் பேசும் அதிகாரியாக வருவார் ரத்னவேல் பாண்டியன். இந்தப் படத்தில், நம் வீட்டில் ஒருவர் போலிஸ் அதிகாரி இருந்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி யதார்த்தமான உறவுகளை வைத்து அதிரடி கலந்த போலிசாகக் களம் இறங்குவார் தீரன். ரத்னவேல் பாண்டியனுடன் இந்த தீரன் நிச்சயம் ஒத்துப்போக மாட்டார்,'' என விளக்கம் அளிக்கிறார் வினோத்.