ஆந்திராவின் புதிய தலை நகரான அமராவதியைக் கட்டமைக்கும் பணியில் இயக்குநர் ராஜமௌலி இருப் பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். அமராவதியை ஆந்திரா வின் தலைநகராக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதன் இறுதி வடிவமைப் புக்கு 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், "அமராவதி உருவாக்கத்திற்காக நான் ஆலோசகர், வடிவமைப்பாளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை யும் இணைத்து ஒரே படமாக மீண்டும் வெளியிட ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜமௌலி: அமராவதி கட்டமைப்பில் எனது பங்கு எதுவும் இல்லை
1 mins read
-

