நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் முன்னாள் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது 'ஸ்பைடர்', 'மெர்சல்' என இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்ட தயா ராகி வருகிறார். தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர் என இப்படி பன்முக திறன் உடைய அவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகனாவதே தன் லட்சியம் என்று கூறியுள்ளார். "ஸ்பைடர், மெர்சல் என இரண்டு படங்களிலும் கிடைத்த வில்லன் வாய்ப்பு எல்லாமே தானாக அமைந்ததுதான். "இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என பல ஆண்டு களாகப் போராடியிருக்கிறேன். அந்தப் போராட்டங்களுக்கு இப் போதுதான் பலன் கிடைக்க துவங்கி உள்ளது. "என் லட்சியமே நடிப்பதுதான். இப்போது தான் மக்கள் என்னை நடிகனாக ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளனர் என நினைக் கிறேன். "ஸ்பைடர் படம் நம் நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப் படையாக வைத்து உருவாகி உள்ளது.
"மாற்றம்தான் வாழ்க்கையின் அடிப்படை என்ற விஷயத்தை இயக்குநர் இந்தப் படத்தில் சொல் லியிருக்கிறார்," என்றார். இதுவரை ஒன்பது படங்களில் கதாநாயகனாக நடித்த அவர் தனது வில்லன் கதாபாத்திரம் பற்றி பேசிய போது, "நாயகனாக மட்டும் நடித்துவிட்டு ஹீரோ எனச் சொல்லிக்கொள்வதில் உடன்பாடு இல்லை. "வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும்; மக்கள் என் நடிப்பை ஏற்க வேண்டும்; அப் போதுதான் கதாநாயகனாக முடியும்," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "சில இடங்களில் நான் ஓவராக நடிப் பதாக மக்கள் சொல்வது உண்மை. "இயக்குநராகி விட்டு நடிக்க வருவதால் வந்த பிரச்சினை அது. அதை இப்போதுதான் மாற்றி இருக்கிறேன்.
"இனிமேல் முழுக்க முழுக்க நடிப்புத்தான். எனக்கு இது தாமத மான அங்கீகாரம்தான். எம்.ஜி.ஆர். 42 வயதில் தான் கதாநாயகனாக நடித்தார். அதற் காக 35 வயதில் அவருக்குத் திறமை இல்லை எனக் கூற முடியாது. "அமிதாப், ரஜினி, விக்ரம் என பலரும் தாமதமாகத்தான் நடிக்க வந்தனர். "இயக்குநராகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். தேவைப்படும்போது அந்த மூட்டையை எடுத்துக்கொள்வேன்," என்றார்.

