என் ஆளோட செருப்பக் காணோம்

என் ஆளோட செருப்பக் காணோம்

1 mins read
2bad79ee-0599-40ee-8c1a-e453aba65fb3
-

'கயல்' ஆனந்தி கதை நாயகியாக நடிக்கும் படம் 'என் ஆளோட செருப்பக் காணோம்'. கே.பி.ஜகன் இயக்கி உள்ளார். யோகி பாபு, தமிழ், சிங்கம் புலி, லிவிங்ஸ்டன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகசெல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'பசங்க' படத்தில் 'பகோடா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகி ஆசையாக வாங்கிய ஒரு ஜோடி காலணி காணாமல் போய்விட, அதை கதாநாயகன் தேடிப் பிடித்து அவரிடம் ஒப்படைப்பதுதான் இப்படத்தின் கதையாம். இதை சுவாரசியமான திரைக்கதை மூலம் சொல்லப்போகிறார்களாம். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள், விநியோகிப்பாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. படப் பணிகள் முக்கால்வாசி முடிவடைந்த நிலையில், 'என் ஆளோட செருப்பக் காணோம்' மிக விரைவில் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.