'ஈரம்' அறிவழகனின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நயன்தாரா. அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்குமாம். நயன்தாரா நடிப்பில் தற்போது 'அறம்' படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள 'வேலைக்காரன்' டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர் காலம்', 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் அறிவழகன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் புதிய படத்தை எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அறிவழகன் சொன்ன கதை நயன்தாராவை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம்.
அறிவழகனின் இயக்கத்தில் நயன்தாரா
1 mins read
-

