ஐம்பது நண்பர்கள் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். அதன் தலைப்பு 'நெடுநல்வாடை'. 'பூ' படத்தில் நடித்துள்ள ராமு இந்தப் படத்தின் கதை நாயகனாக நடித்துள்ளார். முக் கிய வேடத்தில் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடை பெற்றது. வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் சில பிரபலங்கள் பங்கேற்பது வாடிக்கை. ஆனால் இந்தப் படத்தின் பாடல் வெளி யீட்டுக்கு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. மாறாக படத்தை தயாரித்துள்ள 50 நண்பர்கள், படத்தில் பணி யாற்றியவர்களே பொதுமக்கள் முன்னிலையில் பாடல்களை வெளியிட்டனர். இதையடுத்து பாடல்களைக் கேட்ட பொது மக்களில் சிலரை மேடையேற்றி அவர்களுடைய கருத்துகளை யும் படக்குழுவினர் கேட்டறிந் தனர்.
'நெடுநல்வாடை' படத்தில் மைம் கோபி, செந்தி.

