'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் வருகிற தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால், விஷால், ஹன்சிகா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் 'வில்லன்' படம் அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திகில் படமான 'இரும்பு திரை' தைப்பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகும் விஷால் படங்கள்
1 mins read
-

